நடிகர் ரஜினிகாந்தின் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காவல் துறை அதிகாரியாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “ஜெயிலர்”. இப்படத்தின் 2 ஆம் பாகம் 2026 ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ள “ஜெயிலர் 2” படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காவல் துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து அனிருத் இசையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that Shah Rukh Khan will play a cop in Rajinikanth's "Jailer 2".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் - 2 ஓடிடி உரிமத் தொகை!

ஒரே காட்சியில் பான் இந்திய சூப்பர் ஸ்டார்கள்!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!

சண்டீகரில் படமாக்கப்படும் ரஜினி - ஷாருக்கான் காட்சி?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



