சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

துரந்தர் வில்லன் அக்‌ஷய் மீது த்ரிஷ்யம் தயாரிப்பாளர் வழக்கு!

த்ரிஷ்யம் 3 படத்திலிருந்து விலகியதாக அக்‌ஷய் கன்னா மீது வழக்கு தொடரவுள்ளதாக தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் தகவல்

News image
அக்‌ஷய் கன்னா- த்ரிஷ்யம் 2
Updated On :27 டிசம்பர் 2025, 11:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 படத்திலிருந்து விலகியதாக அக்‌ஷய் கன்னா மீது தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் வழக்கு தொடர்ந்துள்ளார்.

த்ரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் கன்னா மொட்டைத் தலையுடன் நடித்திருந்தார். படத்தின் 3-வது பாகத்திலும் அவர் அதே தோற்றத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார்.

ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னர் த்ரிஷ்யம் படத்திலிருந்து விலகியதாக அக்‌ஷய் கன்னா மீது த்ரிஷ்யம் தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் குற்றம் சாட்டியுள்ளார்.

த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாள்கள் மட்டுமே இருந்த நிலையில், படத்தின் கதாபாத்திரத்தில் தலையில் முடியுடன் இருக்கும் தோற்றத்துடன் நடிக்கவிருப்பதாக கோரிக்கை விடுத்தார்.

ஆனால், முந்தைய பாகத்தில் இருந்த தோற்றத்துடனேயே நடிக்க வேண்டும் என்று அக்‌ஷய் கன்னாவிடம் வலியுறுத்தியதாக தயாரிப்பாளர் குமார் கூறினார்.

இருப்பினும், அக்‌ஷய் கன்னா விக் (Wig) அணிந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரது நண்பர்கள் கூறியதால், அக்‌ஷய் கன்னா மீண்டும் கோரினார்.

இந்த நிலையில், அக்‌ஷய் கன்னாவின் கோரிக்கையை மறுத்ததால், த்ரிஷ்யம் 3 படப்பிடிப்புக்கு 10 நாள்கள் மட்டுமே இருந்தபோது, படத்திலிருந்து அக்‌ஷய் கன்னா விலகுவதாகக் கூறினார்.

இது ஒரு தொழில்முறையற்ற நடத்தை என்று அக்‌ஷய் கன்னா மீது தயாரிப்பாளர் குமார் குற்றம் சாட்டினார். மேலும், அக்‌ஷய் கன்னாவால் இழப்புகள் ஏற்பட்டதால், அவர் மீது வழக்கு தொடரவிருப்பதாகவும் குமார் மங்கத் பதக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.