/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வித்தியாசமான படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image
Updated On :25 டிசம்பர் 2025, 1:51 pm
Updated On :25 டிசம்பர் 2025, 1:51 pm

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1மிடில் கிளாஸ்

Listicle image

நடிகர் முனிஷ்காந்த் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மிடில் கிளாஸ். இப்படத்தில், இவருக்கு மனைவியாக நடிகை விஜயலட்சுமி நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

2ரிவால்வர் ரீட்டா

Listicle image

கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை, ஜேகே. சந்துரு எழுதி இயக்கியுள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை(டிச. 26) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

3ரஜினி கேங்

Listicle image

ரஜினி கிஷன் தயாரிப்பில், எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரஜினி கேங். ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியான இந்தப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், முனிஷ் காந்த், திவிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

4ஆந்திரா கிங் தாலுகா

Listicle image

தெலுங்கு மொழிப்படமான ஆந்திரா கிங் தாலுகா, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று(டிச. 25) வெளியாகியுள்ளது.

நடிகர்கள் ராம் போதினேனி, உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை மகேஷ் பாபு இயக்கியுள்ளார்.

5ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்

Listicle image

உலகளவில் அதிக ரசிகர்கள் கொண்ட இணையத் தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் 5வது சீசனின் 2 வால்யூம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்தத் தொடரை ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் காணலாம்.

6கடந்த வார ஓடிடி (உன் பார்வையில்)

Listicle image

நடிகை பார்வதி நாயர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் உன் பார்வையில். இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராம், மகேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உன் பார்வையில் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

7தம்மா 

Listicle image

தம்மா படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

நகைச்சுவை கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

8ஹார்டிலே பேட்டரி 

Listicle image

குரு லட்சுமணன் மற்றும் பாடினி குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இணையத் தொடர் ஹார்டிலே பேட்டரி.

ஹார்டிலே பேட்டரி இணையத் தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்குகிறார். இந்த இணையத் தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

9ஃபார்மா

Listicle image

நிவின் பாலி நடித்துள்ள ஃபார்மா என்ற இணையத் தொடர், ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

இது மருந்து நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை மையமாக வைத்து திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

10பிரேமன்டே

Listicle image

நவநீத் ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான தெலுங்கு மொழிப்படமான பிரேமன்டே திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

11மிஸஸ் தேஷ்பாண்டே

Listicle image

அம்மா மற்றும் மகன் இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸஸ் தேஷ்பாண்டே இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

இந்த இணையத் தொடரை நாகேஷ் குகுனூர் இயக்கியுள்ளார். மாதுரி தீக்‌ஷித் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்

12டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்

Listicle image

மம்மூட்டி - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படம் ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

மேலும் இந்தப் படத்தில் கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

summary

Let's see which films and web series are releasing on OTT platforms this week.

2025 - ஆம் ஆண்டு இல்லறத்தில் இணைந்த சின்ன திரை பிரபலங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.