நடிகர் ராம் சரண் நடிக்கும் அவரது 16ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் 2007இல் சிறுத்த படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் ராஜ மௌலி இயக்கத்தில் நடித்த மகதீரா படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இந்திய அளவில் பிரபலமானார். 2018இல் வெளியான ரங்கஸ்தலம் படமும் நல்ல வரவேற்பினை பெற்றது.
அடுத்து மீண்டும் ராஜமௌலியுடன் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தார். ஆஸ்கர் வரை ஆர்ஆர்ஆர் படம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் அவரது 15ஆவது படமான கேம் சேஞ்சரில் நடித்து வருகிறார். இதற்கடுத்து 16ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தினை இயக்குநர் உப்பென படத்தினை இயக்கிய புச்சி பாபு சனா இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் சுகுமார் ரைட்டிங்ஸும் இணைந்து இந்தப் படத்தினை தயாரிக்கிறார்கள்.

இதில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரதனவேலு ஒளிப்பதிவு செய்கிறார். படக்குழுவுடன் போனி கபூரும் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்களை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. முதல் ஷாட்டினை நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

ராம் சரணின் பெத்தி படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் நூறு சாமி..! முதல்பார்வை போஸ்டர் அப்டேட்!

பெத்தி இரண்டாவது பாடல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை




