தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகி. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றன. மறைந்த பாடகி பவதாரிணி பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் மிகவும் வைரலான பாடலாகும்.
பழைய தமிழ்ப் படங்கள் ரீரிலிஸாகுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகி திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

22 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வருவதை இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் மகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம் வரும் மார்ச் 29ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட தரத்துடன் வெளியாகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் மேம்படுத்தப்பட்ட டிரலரை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், “சில காதல் கதைகள் காலம் கடந்து நிற்கும். அழகி படத்தின் டிரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. மார்ச்.29ஆம் தேதி மறுவெளியீடாகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலையாளத்தில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா!
சிவராஜ்குமாரின் தமிழ்ப்படம் அறிவிப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

பேட்ரியாட் டிரைலர்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


