நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 6 திரைப்படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.

News image
Updated On :7 மார்ச் 2024, 1:20 pm

DIN

வாரந்தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் என்ற மலையாளத் திரைப்படம் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அந்தவகையில், இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.

தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜே. பேபி. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் மார்ச். 8 ஆம் தேதி வெளியாகிறது.

ஹன்ஷிகா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள கார்டியன் திரைப்படம் மார்ச். 8 ஆம் தேதி வெளியாகிறது. ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள சிங்கப் பெண்ணே திரைப்படம் மார்ச். 8 ஆம் தேதி வெளியாகிறது.

அறிமுக நடிகர்கள் நடித்துள்ள நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, டெவில் ஹண்டர்ஸ் திரைப்படங்கள் நாளை (மார்ச். 8) வெளியாகிறது.

மேலும், புதுமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் நடிகர்கள் சார்லி, பவன். கே, இமான் அண்ணாச்சி, மேகனா எலோன் நடித்துள்ள அரிமாபட்டி சக்திவேல் திரைப்படம் நாளை (மார்ச். 8) வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.