அட்லி - சல்மான் கான் படத்தில் ரஜினி?
இயக்குநர் அட்லி - நடிகர் சல்மான் கான் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாகத் தகவல்.


இயக்குநர் அட்லி - நடிகர் சல்மான் கான் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாகத் தகவல்.
ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி புதிய படத்தில் இன்னும் ஒப்பந்தமாகவில்லை. காரணம், ஜவான் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் அடுத்து மிகப்பெரிய பட்ஜெட் படமொன்றை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்.
இதனால், அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, நடிகர் அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணி இணைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, இயக்குநர் அட்லி நடிகர் சல்மான் கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நடிக்க வைக்கும் முயற்சிகளில் அட்லியும் தயாரிப்பு நிறுவனமும் முயன்று வருவதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இது இரண்டு கதாநாயகர்களைக் கொண்ட கதையாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது, நடிகர் சல்மான் கான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...