15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தக் லைஃப் டப்பிங் பணிகளை தொடங்கிய சிம்பு!

நடிகர் சிம்பு தக் லைஃப் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

News image

சிம்பு - படம்: இன்ஸ்டா / சிம்பு.

Updated On :27 ஜூலை 2024, 4:49 am

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

தக் லைஃப் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில சண்டைக்காட்சிகள் மட்டும் எடுக்கப்படவுள்ளன. தற்போது, நடிகர் சிம்பு மற்றும் துணை கதாபாத்திரங்களுக்கு இடையேயான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

முன்னதாக, ஹெலிகாப்டரிலிருந்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது அவர் தவறி கீழே விழுந்ததில் இடது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில், ஜோஜூ ஜார்ஜ் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மீதமுள்ள காட்சிகளை நடித்துக்கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இன்ஸ்டாவில் புகைப்படத்தினை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.