மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அஜித் - பிரசாந்த் நீல் கூட்டணி உண்மையா? பதிலளித்த அஜித்தின் மேலாளர்!

நடிகர் அஜித்குமார் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணி குறித்த அப்டேட்.

News image

அஜித், பிரசாந்த் நீல், யஷ்.

Updated On :27 ஜூலை 2024, 9:18 am

இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப், சலார் ஆகிய படங்கள் பிரம்மாண்டமாக உருவானதுடன் மிகப்பெரிய வசூலையும் பெற்றன. 

சலார் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் துவங்க உள்ளது. இதற்கிடையே, பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

கேஜிஎஃப் படத்திற்குப் பின்பே அஜித்துடன் பிரசாந்த் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சலார் மற்றும் துணிவு படத்தால் இருவரும் வேறு படங்களில் கவனம் செலுத்தினர்.

தற்போது, அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சலார் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பின் இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித்தின் 64-வது படத்தை இயக்குகிறார் என்றும் அது கேஜிஎஃப் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாக இருக்கலாம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் அஜித்தின் மேலாளரிடம் இது குறித்து விசாரித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, “இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். மற்றபடி கூட்டணி, திரைப்படம் என்பதெல்லாம் எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.