பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

அடம்பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தனது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

News image
பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ரஜினிகாந்த்- படங்கள்: எக்ஸ்
Updated On :26 ஜூலை 2024, 6:05 am

DIN

ஜெயிலர் திரைப்பட்டத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியானது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் படப்பிடிப்பை முடித்து ஓய்வில் இருக்கும் ரஜினி, கூலி படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் தனது பேரன் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்ததால் ரஜினியே அழைத்துச் சென்றுள்ளார். நடிகர் ரஜினியைப் பார்த்த மாணவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துபோன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.