ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு துவக்கம்!
ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியானது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று (ஜூலை 5) துவங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நடிகர் ரஜினி நேற்று சென்னையிலிருந்து ஹைதராபாத் கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...