தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டவர் நடிகர் விஜய்: சிவ ராஜ்குமார் புகழாரம்! 

பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்  நடிகர் விஜய் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:24 pm

DIN

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரரும் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்றார் சிவ ராஜ்குமார். இவரது கோஸ்ட் படம் சமீபத்தில் வெளியானது. 

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜன. 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து நேர்காணல் ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது:

என்னுடைய 100வது படத்துக்கு விஜய் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரது படங்கள் மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் புதிய ஸ்டைல் இருக்கிறது. அவர் ஒரே இரவில் நட்சத்திர நடிகராகவில்லை. மிகவும் கடினமாக உழைத்து எவ்வளவோ போராடித்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். தனது நடிப்பு, தோற்றம், பேச்சு, படங்கள் தேர்வு என தன்னையே மெருகேற்றிக்கொண்டவர் நடிகர் விஜய். இந்த விஷயங்கள் மிகவும் பிடிக்கும். 

Story image

மாணவர்களின் கல்விக்காக உதவுவதை பல விடியோக்களில் நான் பார்த்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்தது. விஜய் பற்றிய நல்ல விஷயமாக இதை நான் பார்க்கிறேன். 

அரசியல் குறித்து அவருக்கு கணிப்பு இருக்கிறது. மக்களை விஜய் நம்புகிறார்; மக்களும் அவரை நம்புகிறார்கள். பொதுவாக மக்கள் நடிகர்கள் ஏன் தனது தொழிலை விட்டு அரசியலுக்கு வருகிறார்கள் எனக் கேட்பார்கள். ஆனால், விஜய் விஷயத்தில் மக்கள் வரவேற்கிறார்கள். விஜய்யிக்கு அந்த வசீகரம் இருக்கிறது எனப் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.