நடிகர் நானி நடிப்பில் உருவாகும் சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சாட்டர்டே) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். தற்போது, தன் 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் நானி இணைந்துள்ளார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்தக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சரிபோத சனிவாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் நாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் தெலுங்கு டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பான் இந்திய வெளியீடாக விரைவில் திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!

சந்தீப் கிஷனின் புதிய படம்!
லெனின் பாண்டியன் டிரைலர்!
ஜெயசூர்யா, அனுஷ்காவின் கத்தனார் டிரைலர்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



