பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.
2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் தனது சிறப்பான நடிப்பினால் இதுவரை 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
2019இல் ‘மணிகர்னிகா- ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார். தற்போது எமர்ஜென்சி படத்தினை முழுக்க முழுக்க அவரே இயக்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளப் படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத், அவரே இந்தப் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.
ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதன் டிரைலர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
dinmani online
ரசிகர்கள் யூடியூப்பில் கங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். “ நீங்கள் கங்கனா ரணாவத்தை வெறுக்கலாம் ஆனால் அவரது திறமையை மறுக்க முடியாது. 5 ஆவது தேசிய விருதுக்கு தயார்” என பலரும் நேர்மறையான (பாசிட்டிவ்) கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
dinmani online
உலகம் முழுவதும் வரும் செப்.6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சருடன் காதலா? கங்கனா ரணாவத் பதில்!

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!

”ராகுலின் நடவடிக்கை அசௌகரியமளிக்கிறது!” பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


