மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வேட்டையன்: டப்பிங் பணிகளை தொடங்கிய துஷாரா!

நடிகை துஷாரா விஜயன் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

News image

டப்பிங் பணிகளை தொடங்கிய துஷாரா விஜயன். - படங்கள்: இன்ஸ்டா / துஷாரா விஜயன்.

Updated On :1 ஆகஸ்ட் 2024, 12:20 pm

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். பின்னர் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன், அநீதி படங்களில் நடித்திருக்கிறார்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் துஷாரா, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. ஆனால் துஷாரா கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை துஷாரா வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய துஷாரா.

வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய துஷாரா.

இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இதன் டப்பிங் பணிகளை ஃபக்த் பாசில் முடித்ததும் குறிப்பிடத்தக்கது.

வீர தீர சூரன் போஸ்டர்.

வீர தீர சூரன் போஸ்டர்.

ராயனுக்குப் பிறகு நடிகை துஷாரா, நடிகர் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.