மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

கில்லி திரைப்படத்தின் மறுவெளியீட்டு விநியோகஸ்தர் சக்தி கோபாலன் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்தினார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 7:17 am

நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்த படம் கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.

இப்படம் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்ததோடு விஜய்யின் மார்கெட்டையும் உயர்த்தியது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருப்பார். படத்துக்கு இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது. அதிலும் அப்படிபோடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் அதிகம் கேட்கப்படுகிறது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி திரைப்படம் 4கே டிஜிட்டல் தரத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி இதனை வெளியிட்டுள்ளது. மறுவெளியீட்டிலும் இப்படத்திற்கு ரசிகர்கர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்தி கோபாலன் நடிகர் விஜய்யை சந்தித்து மாலை அணிவித்தார். அப்போது, “கில்லி திரைப்பட மறு வெளியீட்டில் ரசிகர்களோடு திரையரங்கில் அப்படத்தை பார்த்த பொழுது அவர்களின் கொண்டாட்டம் எனக்கு வியாபாரத்தைத் தாண்டி ஒரு திரைப்பட ரசிகனாக சிலிர்ப்பைத் தந்தது. திரைத்துறை நலம் விரும்பியாக நீங்கள் வருடத்துக்கு ஒரு படமாவது தொடர்ந்து நடிக்க வேண்டும்” என்று என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

அதற்கு நடிகர் விஜய் சிரித்துக்கொண்டே சரி என்றார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story image

இத்துடன் கில்லி படத்தின் இயக்குநர் தரணியும் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளை பரிமாற்றிக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.