விஜய் - 69 படத்தில் சமந்தா, ஆலியா பட்?
விஜய் - 69 படத்தின் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகத் தகவல்.


நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் அரசியலுக்கு வருவதையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.
நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
அரசியல் அறிவிப்புடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பதையும் விஜய் அறிவித்திருந்தார். இறுதியாக, விஜய் - 69 படத்துடன் அவர் சினிமாவிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. விஜய்யின் கடைசி படமென்பதால், இதை யார் இயக்குவார் என்கிற கேள்விக்கு புதிய விடை கிடைத்துள்ளது.
தகவலின்படி, விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வினோத் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கினார்.
நடிகர் கமல்ஹாசன் - வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது .
விஜய் - வினோத் திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்தே உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் நாயகிகள் தேர்வு நடைபெற்று வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. அதன்படி, நடிகைகள் சமந்தா, ஆலியா பட் இருவரையும் தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளனராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...