அறிமுக நடிகராக தோன்றியிருக்கும் நடிகர் சச்சினின் உழைப்பு நன்றாக வந்திருக்கிறது. சராசரி இளைஞனான சச்சின் பேய்களால் துன்பப்படும் இடங்களில் நேர்மையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நடிகை அபர்ணநதி எதற்காக படத்தில் இருக்கிறார் என்பதை சல்லடை போட்டும்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பாடலுக்கு வருகிறார். சில இடங்களில் காதல் காட்சிகளுக்கு வருகிறார். அதற்கு பிறகு ஒட்டுமொத்த திரைப்படத்திலும் அவரை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. சச்சினின் நண்பர்களாக வரும் நடிகர்களும் நாடகத்தன்மையான நடிப்பையே கொடுத்திருக்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு வசனமும், நடிப்பும் செயற்கைத்தன்மை நிறைந்ததாக இருந்தது அப்பட்டமாக காட்சிகளில் தெரிவது சலிப்பை ஏற்படுத்துகிறது.