/

ரஜினி - 170 பூஜை புகைப்படங்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படத்தின் பூஜை புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:05 am

DIN

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்திற்கும் அனிருத்துதான் இசை. படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. 

இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Story image

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்தில் செட் அமைக்கும் பணிகள் கடந்த 10 நாள்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு நேற்று சென்றார்.

இந்த நிலையில், ரஜினி 170-வது படத்தின் பூஜை புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.