எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம்  ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகவுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:45 am

DIN

இந்த வாரம்  ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகவுள்ளது.

வாத்தி

திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' வெற்றிப் படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்துள்ள 'வாத்தி' படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் இந்தப் படம் பிரமாண்டமாக வெளியிடப்ப்பட்டது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக ஆக உள்ளது

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.