எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய மிருணாள் தாக்குர்!

நடிகை மிருணாள் தாக்குர் தனது பிறந்தநாளை விஜய்தேவரகொண்டாவுடன்  நடிக்கும்  புதிய படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:48 am

DIN

மராத்தி படங்களில் அறிமுகமான நடிகை மிருணாள் தாக்குர் தமிழ் ரசிகர்களுக்கு சீதா ராமம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் பான் இந்தியப் படமாக வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. 

Story image

இதற்கடுத்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்தும் மிருணாள் தாக்குர் புகழ் பெற்றார். தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக இவரை நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா.

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் தாக்குர் நடிக்கின்றனர். 2018இல் வெளியாகி அமோக வரவேற்பினை பெற்ற கீதா கோவிந்தம் படத்தினை இயக்கியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்தான இசையமைப்பாளர் கோபி சுந்தரும் இந்தப் படத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

இந்தப் படக்குழுவுடன்தான் மிருணாள் தாக்குர் தனது பிறந்தநாளை  கொண்டாடியுள்ளார். படக்குழு நம்பமுடியாத திறமை மற்றும் அழகான நடிகை என வாழ்த்துப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.