டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' டிரெய்லர் வெளியானது

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள இடம் பொருல் ஏவல் பட டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:39 am

DIN

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள இடம் பொருல் ஏவல் பட டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக லிங்குசாமி இந்தப் படத்தை தயாரித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இந்தப் படம் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளியாகாமல் இருந்தது. 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் பேரில் இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்து முதன் முறையாக பாடல் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியாகும்

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.