டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதி - விஷ்ணு விஷாலின் 'இடம் பொருள் ஏவல்'

விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இடம் பொருள் ஏவல் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவிருக்கிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:36 am

DIN

விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இடம் பொருள் ஏவல் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவிருக்கிறது. 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டே தயாராகிவிட்டது. ஆனால் கடன் பிரச்னை காரணமாக இந்தப் படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதமானதாக கூறப்பட்டது.  

தற்போது இந்தப் படம் விரைவில் வெளியாகும் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து இந்தப் படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநர் என்.லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் கதையில் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தை தயாரித்திருக்கிறோம். 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா, வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருக்கின்றனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.  

இடம் பொருள் ஏவல் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகையால் இப்படத்தை மிக விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.