டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

’உங்களுக்கு முன் நான் பெரிய ஆள் இல்லை..’ ரஜினிக்கு பதிலளித்த பிரபல நடிகர்!

ரஜினியின் உயரத்தோடும் பெருமையோடும் தன்னை ஒருபோதும் ஒப்பிட முடியாது என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:33 am

DIN

ரஜினியின் உயரத்தோடும் பெருமையோடும் தன்னை ஒருபோதும் ஒப்பிட முடியாது என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'சோலே’ படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர்.

அதன்பின், நாயகனாக அதிகப் படங்களில் நடித்தவர் தற்போது நல்ல கதையம்சம் உள்ள படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ’பின்க்’ , ’ஜூண்ட்’ போன்ற சமூக கருத்துகளை உள்ளடக்கிய படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வரும் அமிதாப் பச்சன் கடந்த செவ்வாய்க்கிழமை தன் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

நடிகர் அமிதாப் பச்சனுடன் ரஜினி

நடிகர் அமிதாப் பச்சனுடன் ரஜினி

அன்று அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘அவர் லெஜண்ட். என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் இந்திய சினிமாவின் சூப்பர் ஹீரோ இன்று 80-வது வயதிற்குள் நுழைகிறார். என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என வாழ்த்துக்களைப் பகிர்ந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து அமிதாப் பச்சன், ‘ரஜினி சார் நீங்கள் எனக்கு அதிகப்படியான கௌரவத்தைத் தருகிறீர்கள். உங்களின் உயரத்தோடும் பெருமையோடும் என்னை ஒப்பிட முடியாது. நீங்கள் என் சக நடிகர் மட்டுமல்ல அன்பான நண்பரும் கூட. உங்களுக்கு என் நன்றியும் அன்பும்.’ என நடிகர் ரஜினிக்கு டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.