அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ராம் சேது' படம் ரூ. 75 கோடி மட்டுமே வசூல்செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ராம் சேது’. ஜாக்லீன் பெர்னான்டஸ், நுஷ்ரத் பாருச்சா, சத்ய தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராமர் பாலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் ரூ. 90 கோடி செலவில் எடுக்கப்பட்ட நிலையில் ரூ. 75 கோடி வசூலுடன் நின்றுவிட்டது. இதனால் ரூ. 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஹிந்தியில் உருவான பான் இந்தியா படங்கள் பெரிதாக வசூல் செய்யவில்லை. ரன்பீர் கபூர் நடிப்பில் ரூ. 160 கோடி செலவில் தயாரான சம்ஷேரா படம் ரூ.70 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
அதுபோல அமீர்கானின் லால் சிங் சத்தா ரூ.200 கோடி செலவில் தயாரான நிலையில் ரூ. 50 கோடி கூட வசூல் செய்யவில்லை. இத்துடன் தற்போது அக்ஷய் குமார் படமும் இனைந்துள்ளது.
ஹிந்தி பான் இந்தியா படங்களுக்கு தென் திரையுலகில் மார்க்கெட் குறைந்துவருவதாக பேசப்படுகிறது.
இதையும் படிக்க | நயன்தாரா 'ஹீரோ'வான முதல் படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

