தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

'தளபதி 66'' படத்துக்காக முதன்முறையாக இந்த பிரபல நடிகையுடன் இணையும் விஜய்: உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் கதாநாயகி குறித்து தகவல் கிடைத்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:36 am

DIN

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனை அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதி செய்திருந்தார். இருப்பினும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் தற்போது உறுதியான தகவல் கிடைத்துள்ளது. 

Story image

நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம். அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா நடித்திருந்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஹிந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது விஜய்யுடன் ராஷ்மிகா இணையவிருப்பதால் இந்தப் படத்துக்கு தெலுங்கு, ஹிந்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தளபதி 66 திரைப்படம் பூவே உனக்காக படத்தைப் போல இருக்கும் எனவும், குடும்ப உறவுகள் குறித்து பேசும் படமாக இருக்கும் எனவும் அதன் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.