இவர்கள் இருவருக்கும் பிறகு திரையில் தோன்றிப் பெரும் வெற்றிகளைக் கொடுத்தபோதிலும் நீடித்திருக்க முடியாத நிலையில் - காலவெள்ளத்தில் - வெளிச்சத்திலிருந்து வெளியே சென்றுவிட்டவர்களின் பட்டியலை நினைத்துப் பார்த்தால் நம்பவே இயலாது. சரத்பாபு, பாண்டியராஜன், பாக்கியராஜ், மோகன், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், அர்ஜுன், சுரேஷ், பிரபு, பார்த்திபன், சத்யராஜ், விஜயகுமார், நெப்போலியன், பிரபுதேவா, பிரசாந்த், அப்பாஸ்... சத்யராஜ் போன்ற சிலர் இன்னமும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். (பத்தாண்டுகள் படங்களில் நடிக்காவிட்டாலும்கூட லைம்லைட்டில் இருக்கும் வடிவேலு இந்தப் பட்டியலில் வர மாட்டார்).