டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருமணம் எனக் கூறி ஏமாற்றிய யாஷிகா

நடிகை யாஷிகா தனக்கு திருமணம் என கூறி ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:51 am

DIN

விபத்துக்கு பிறகு நடிகை யாஷிகா மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது, புகைப்படங்கள் பகிர்வது என பரபரப்பாக இயங்கி வருகிறார். 

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனை மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன். எனது அம்மாவும் அப்பாவும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். திருமணம் செய்வதற்கு இது சரியான தருணம். நான் சினிமாவை நேசிக்கிறேன். அதனால் நான் உங்களைத் தொடர்ந்து மகிழ்விப்பேன். 

Story image

இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனக்கு காதல் எல்லாம் ஒத்துவராது. உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை'' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவர் சில மணி நேரங்களுக்கு பிறகான மற்றொரு பதிவில், ''எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள தின வாழ்த்துகள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்துகொள்வது என்ற எண்ணமே எனக்கு இல்லை' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.