பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

குக் வித் கோமாளி அடுத்த சீசன் குறித்து வெளியான தகவல் : ரசிகர்கள் மகிழ்ச்சி

குக் வித் கோமாளி அடுத்த சீசன் வருகிற நவம்பர் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:12 am

DIN

குக் வித் கோமாளி அடுத்த சீசன் வருகிற நவம்பர் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருவதே சான்று.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட பாடகி ஷிவாங்கி, சிவகார்த்தியேனுடன் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பவித்ரா, சதிஷுக்கு ஜோடியாக நாய் சேகர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தர்ஷா குப்தா தற்போது ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மதுரை முத்து, தீபா போன்றவர்களும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். 

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது துவங்கும் என்று ரசிகர்களிடேய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அடுத்த சீசன் வருகிற நவம்பர் முதல் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.