திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தீபாவளிக்கு டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்': ரசிகர்கள் அதிர்ச்சி

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் விரைவில் சன் டிவியில் ஒளிரப்பாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:27 am

DIN

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் விரைவில் சன் டிவியில் ஒளிரப்பாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியான டாக்டர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் நிறைய திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

சிவகார்த்திகேயன் படங்களில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை டாக்டர் திரைப்படம் பெற்றுள்ளதாக திரைப்பட வல்லுநர்கள் கூறுகின்றனர். 

இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமயை சன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஒளிபரப்பாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். 

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் டிவியில் ஒளிபரப்பாகவிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே அமேசான் பிரைமில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திரையரங்குகளில் மாஸ்டர் படத்துக்கு சென்ற கூட்டம் குறையவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.