டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த', சிம்புவின் 'மாநாடு' படத்துடன் தீபாவளி போட்டியில் இணைந்த சூர்யா படம்: அதிகாரப்பூர்வ தகவல்

சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:16 am

DIN

சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

சூர்யா - ஜோதிகா இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்த ஜெய் பீம், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஓ மை டாக் ஆகிய 4 படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மாதம் ராமே ஆண்டாலும் ராவேணே ஆண்டாலும் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனையடுத்து சசிக்குமார், ஜோதிகா இணைந்து நடித்துள்ள உடன் பிறப்பே திரைப்படம் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இன்று வெளியாகியுள்ள மற்றொரு அறிவிப்பில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படமும், சிம்புவின் மாநாடு திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதால், மூன்று படங்களுக்கும் வசூல் ரீதியிலான போட்டி உருவாகாவிட்டாலும், விமரிசன ரீதியான போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.