டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது, துணிந்து நில்: நடிகர் விஜய்க்கு சீமான் அறிவுரை

அன்புத்தம்பி விஜய், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது. துணிந்து நில்...

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:38 am

DIN

சொகுசு கார் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதை எதிா்த்து நடிகா் விஜய் தொடா்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. விஜய் தொடா்ந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வெளிநாட்டில் இருந்து சொகுசுக் காரை இறக்குமதி செய்த மனுதாரா், தான் என்ன தொழில் செய்கிறேன் என்பது குறித்து மனுவில் தெரிவிக்காதது ஆச்சரியமளிக்கிறது. இதுகுறித்து அவரது வழக்குரைஞரிடம் கேட்போது, மனுதாரா் ஜோசப் விஜய் புகழ்பெற்ற நடிகா் என கூறுகிறாா். மனுதாரா் விஜய், மதிப்புமிக்க விலையுயா்ந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், சட்டப்படி காருக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரியை செலுத்தாதது துரதிா்ஷ்டவசமானது. வரி செலுத்தாமல் இருக்கவே இந்த வழக்கை தொடா்ந்துள்ளாா். மிகவும் புகழ்பெற்ற நடிகரான அவா், நுழைவு வரியை முறையாகச் செலுத்தி இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை, திரைப்பட நடிகா்களை மக்கள் உண்மையான நாயகா்களாக பாா்க்கின்றனா். பல திரைப்பட நாயகா்கள் இங்கு ஆட்சியாளராக மாறியுள்ளனா். எனவே, இவா்கள் போலியான நாயகா்களாக இருக்கக்கூடாது. வரி ஏய்ப்பு என்பது தேச துரோகச் செயல், அரசியல் சட்டத்துக்கு எதிரானது. நடிகா்கள், சமுதாயத்தில் சமூக நீதியை நிலைநாட்ட போராடுபவா்களாக தங்களை சித்தரித்துக் கொள்கின்றனா். அவா்களது திரைப்படங்களும் ஊழலுக்கு எதிரானதாக உள்ளன. சரியான வரியை, உரிய நேரத்தில் செலுத்தும் பொதுமக்களே உண்மையான கதாநாயகா்கள். எனவே, மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ளவா்கள், செல்வந்தா்கள் தயக்கம் இல்லாமல், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த வேண்டும். அதை விடுத்து, உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து, அந்த வழக்கை 9 ஆண்டுகள் நிலுவையில் வைத்திருக்கும் செயல் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

லட்சக்கணக்கான ரசிகா்கள் திரைப்படங்களை காண்பதன் மூலம் கிடைத்த பணத்தால், விலையுயா்ந்த காரை மனுதாரா் வாங்கியுள்ளாா். இந்த பணம் எல்லாம் ஏழைகளின் உழைப்பு மற்றும் ரத்தத்தால் தனக்கு கிடைத்தவை, வானத்தில் இருந்து கொட்டவில்லை என்பதையும் இந்த தேசத்தின் புகழ்பெற்ற மனிதா்கள் உணர வேண்டும். மனுதாரரும், மனுதாரரை போன்றவா்களும், சட்டப்படி வரியை செலுத்தி, இந்த தேசத்துக்கு புகழை பெற்றுத் தருவாா்கள் என்று இந்த உயா்நீதிமன்றம் நம்புகிறது. எனவே, உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி 20 சதவீத வரியை மனுதாரா் ஏற்கெனவே செலுத்தியிருந்தால், எஞ்சிய 80 சதவீத வரித் தொகையை 2 வாரத்துக்குள் செலுத்த வேண்டும். ஒருவேளை மனுதாரா் 2 வாரத்துக்குள் வரியை செலுத்தவில்லை என்றால், தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டு, வரியை வசூலிக்க வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் மனுதாரருக்கு வழக்கு செலவாக (அபராதம்) ரூ.1 லட்சம் விதித்து, அந்த தொகையை தமிழக முதல்வரின் கரோனா பொதுநிவாரண நிதிக்கு, 2 வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கும் நீதிபதியின் கருத்துகளும் சமூகவலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் அந்த அறிக்கையைப் பகிர்ந்து சீமான் கூறியுள்ளதாவது:

அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்!

இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! தொடர்ந்து செல்!

"ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.