தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனாவால் மீண்டும் இணைந்த விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதி!

இரு குழந்தைகளும் ஹிருத்திக்கிடம் வசித்து வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக...

News image
Updated On :25 மார்ச் 2020, 11:49 am

கரோனா வைரஸ் நிகழ்த்தும் பயங்களுக்கும் ஆச்சர்யங்களுக்கும் அளவே இல்லை.

விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதி, கரோனா வைரஸ் காரணமாக மீண்டும் இணைந்து வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஃபேஷன் டிசைனரான சுசன்னேவை 2000-ம் ஆண்டு திருமணம் செய்தார் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு.

கருத்துவேறுபாடு காரணமாக 2013 முதல் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். 2014-ல் விவாகரத்து பெற்றார்கள்.

இந்நிலையில் கரோனா வைரஸ் இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்துள்ளது.

கரோனா வைரஸால் உலகம் முழுக்க 19,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா்.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மகன்களின் நலனுக்காக தற்போது ஹிருத்திக் வீட்டில் வசித்து வருகிறார் சுசன்னே. இரு குழந்தைகளும் ஹிருத்திக்கிடம் வசித்து வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது மகன்கள் வீட்டில் தனிமையை உணரக்கூடாது என்பதற்காக ஹிருத்திக்கின் வீட்டுக்கு வந்து மகன்களுக்குத் துணையாக உள்ளார் சுசன்னே. இதை இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டு, சுசன்னேவுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார் ஹிருத்திக். வீட்டில் இருக்கும் சுசன்னேவின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.