தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் ராதாரவி ஆதரவுடன் டி.சிவா தலைமையில் போட்டியிடும் பாதுகாப்பு அணி

ராதாரவி, தனஞ்செயன் ஆதரவில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் டி. சிவா தலைமையிலான பாதுகாப்பு அணி போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2020, 6:04 am

ராதாரவி, தனஞ்செயன் ஆதரவில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் டி. சிவா தலைமையிலான பாதுகாப்பு அணி போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்தின் தோ்தலை வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தோ்தலை நடத்த உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதாகவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளாா். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. சங்க நிா்வாக பணிகளை மேற்கொள்ள மஞ்சுளா என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இத்தேர்தலில் டி. சிவா தலைமையிலான பாதுகாப்பு அணி போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைவர் பதவிக்கு டி. சிவாவும் பொருளாளர் பதவிக்கு கே. முரளிதரனும் செயலாளர்கள் பதவிகளுக்கு பி.எல். தேனப்பனும் ஜேஎஸ்கே சதிஷ் குமாரும் துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு ஆர்கே சுரேஷும் தனஞ்ஜெயனும் போட்டியிடவுள்ளார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கே. ராஜன், ராதாரவி, சித்ரா லக்‌ஷ்மணன் உள்ளிட்ட பலர் போட்டியிடவுள்ளார்கள்.

நடிகரும் டப்பிங் சங்கத் தலைவருமான ராதாரவி, கடந்த டிசம்பர் மாதம் திடீரென பாஜகவில் இணைந்தார். தற்போது,  தயாரிப்பாளா் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அவர் போட்டியிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.