புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கணவர், மகனுடன் சூலூரில் பொங்கல் விழாவைக் கொண்டாடிய ரஜினி மகள்! (படங்கள்)

தன் கணவர் விசாகனின் ஊரான கோவை மாவட்டத்தில் உள்ள சூலூருக்குச் சென்று பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளார் செளந்தர்யா.

News image
Updated On :18 ஜனவரி 2020, 5:33 am

கோவை மாவட்டம் சூலூரில் தனது கணவர், மகனுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த்.

வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகர் விசாகனை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா கடந்த ஆண்டு திருமணம் செய்தார். 

கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ள விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. விசாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்தவர். 2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால், இருவரும் 2016-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து விசாகன் - செளந்தர்யா ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் தன் கணவர் விசாகனின் ஊரான கோவை மாவட்டத்தில் உள்ள சூலூருக்குச் சென்று பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளார் செளந்தர்யா. சென்னையிலும் சூலூரிலும் பொங்கல் விழாவைத் தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய செளந்தர்யா, இதுதொடர்பான பல புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.