புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

காப்பியடிக்கப்பட்டதா விஜய்யின் மாஸ்டர் பட போஸ்டர்?

பொங்கல் விழாவையொட்டி மாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டர் நேற்று வெளியானது...

News image
Updated On :16 ஜனவரி 2020, 11:28 am

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் பொங்கல் விழாவையொட்டி மாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டர் நேற்று வெளியானது.

போஸ்டர் அசத்தலாக இருந்தாலும் இந்த மாஸ்டர் பட போஸ்டர் ஏற்கெனவே வந்த சில படங்களின் போஸ்டர்களைப் பிரதிபலிப்பதாகச் சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவுகள் எழுதியுள்ளார்கள். 

இதற்கு முன்பு மாஸ்டர் படத்தின் கதை, சைலன்ஸ்டு என்கிற கொரியப் படத்தின் தழுவலாக இருக்கிற வாய்ப்பு உள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்தது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் பட போஸ்டரும் இதேபோன்றதொரு விவாதத்தை உருவாக்கியுள்ளது. 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.