ஈரோடு மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் காலிங்கராயன் வாய்காலை அமைத்த காலிங்கராயனைப் போற்றும் விதமாக காலிங்கராயன் தின விழா நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசியதாவது:
ஒரு தனி மனிதனாக ஊர் நன்றாக இருக்கவேண்டும் என எண்ணியிருக்கிறார் காலிங்கராயன். 738 வருடங்களுக்கு முன்பு ஒரு தனி மனிதனாக, வசதி வாய்ப்பு இல்லாதபோது இந்த வாய்க்காலை அமைத்துள்ளார்.
ஆரோக்கியத்தைத் தாண்டி சொத்து எதுவும் கிடையாது. ஈரோடு பக்கத்தில் குழந்தைகள் பிறப்பதே ஆச்சர்யமாகிவிட்டது என்கிறார்கள். அந்தளவுக்குக் கருத்தரிப்பு மையங்கள், மருந்தகங்கள். எதனால் இப்படி ஆனது? தண்ணீர் கெட்டுப் போனதால் தான். நிறைய பணம் சம்பாதித்து ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் அவ்வளவுதான். அடுத்தவர்களின் ஆரோக்கியத்தைப் பாழடிப்பது அதைவிடக் கொடுமை. ஆற்றில் கலக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு ஃபேக்டரிக்கும் கடிதம் எழுதுவோம். பொருட்செலவு செய்து அவர்கள் அதைச் சரி செய்யட்டும். அடுத்த தலைமுறை செய்வார்கள் என நினைக்கிறேன்.
விவசாயி என்றாலே வயதானவர்கள் என்றுதான் ஆகிவிட்டது. அப்படி இருக்கவே கூடாது. இனி விவாசயத்தை நாம் தான் பாதுகாக்கவேண்டும். என் பெண்ணுக்கு முளைப்பாரி என்றால் என்னவென்றே தெரியாது. இன்று அவளை ஆற்றில் விளையாட விட்டபோது அவ்வளவு சந்தோஷம். இதை அவள் வாழ்க்கை முழுக்க இதை ஞாபகம் வைத்திருப்பாள். பொங்கல் சமயத்தில் நான் ஊருக்கு வருவதற்குக் காரணம், இந்தப் பழக்கத்தை விட்டு விடக் கூடாது என்பதற்குத்தான். எவ்வளவு சம்பாதித்தாலும் விவசாயத்தை விட்டுவிடக் கூடாது என்பதற்காக சென்னைக்கு அருகிலேயே விவசாயம் செய்ய இடம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இனிமேல் இளைஞர்கள் தான் இறங்கி வேலை செய்யவேண்டும். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது யார் என்று பார்த்தால் கல்லூரி இளைஞர்கள் தாம். சிஏஏக்குப் (குடியுரிமை திருத்தச் சட்டம்) போராடிக்கொண்டிருப்பதும் நம் கல்லூரி மாணவர்கள் தாம். அடுத்தத் தலைமுறை தான் விவசாயத்தையும் தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ள விடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


