திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கொரியத் திரைப்படத்துக்கும் விஜய் நடிக்கும் மாஸ்டருக்கும் என்னென்ன ஒற்றுமைகள்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படம் மாஸ்டர். இது தென்கொரியத் திரைப்படமான 'சைலன்ஸ்ட்' எனும் படத்தைத் தழுவி எடுக்கப்படுவதாக வதந்தி பரவியுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2020, 7:28 am

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படம் மாஸ்டர். இது தென்கொரியத் திரைப்படமான 'சைலன்ஸ்ட்' எனும் படத்தைத் தழுவி எடுக்கப்படுவதாக வதந்தி பரவியுள்ளது.

காது கேளாத மற்றும் ஊமையாக இருக்கும் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் ஹாஸ்டல் வார்டன்களிலிருந்து காப்பாற்றும் கதாநாயகனைப் பற்றிய கதைதான் சைலன்ஸ்ட் படம். இப்படம் வெளியான சமயத்தில், கடும் சர்ச்சைக்குள்ளானது. தென்கொரிய அரசாங்கம் அத்தகைய ஹாஸ்டல்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது.

மாஸ்டர் படத்தில் விஜய் பேராசிரியராக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் இதன் கதை ஹாஸ்டலை அடிப்படையாகக் கொண்டதாக வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகின. தவிர, அண்மையில் படக்குழு மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் படப்பிடிப்பை நடத்தி முடித்தது.

லோகேஷ் கனகராஜ் மாஸ்டரின் திரைக்கதையை அசலாக உருவாக்கியுள்ளார் என்றும், கொரியப் படத்தின் கதை வேறு என்று அவரது நெருக்கமான வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.

விஜய் தவிர, இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். 'பேட்ட’யில் நடித்த மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

படத்திலுள்ள சில காட்சிகளுக்காக விஜய் க்ளீன் ஷேவ் கெட்டப்பில் தோன்றுவார் என்று சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. 

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னை, தில்லி மற்றும் சிவமோகாவில் படமாக்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.