தன்னை ஒருதலையாகக் காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் 15-வது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால், தன்னம்பிக்கையுடன் போராடி அவனுக்குச் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டுதலைப் பெற்ற லட்சுமி அகர்வால், சில ஆண்டுகள் கழித்து அலோக் தீட்சித் என்பவரைக் காதலித்து ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். தன்னைப் போன்று அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சண்டிகரில் சமூக அமைப்பு ஒன்றை லட்சுமி அகர்வால் துவங்கியுள்ளார்.
இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் மற்றும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார். லட்சுமி அகர்வால் வேடத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். சபாக் (Chhapaak) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், மிரிகா புரொடக்ஷன்ஸ், தீபிகா படுகோனின் கா புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் லட்சுமி மீது அமிலம் வீசியவரின் பெயர் ராஜேஷ் என மாற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. நிஜத்தில் அமிலம் வீசியவரின் பெயர் நதீம் கான் என்று இருக்கும்போது மதத்தை மாற்றி, வேறொரு பெயர் வைக்கவேண்டிய அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், நேற்று ப்ரீமியர் ஷோவில் படத்தைப் பார்த்தவர்கள், அமிலம் வீசியவரின் பெயர் பஷீர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள். தீபிகாவின் காதலர் பெயர் தான் ராஜேஷ் எனவும் தகவல் அளித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


