ஆஸ்திரேலியாவில் இதுவரை சுமாா் 60 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பு காட்டுத் தீக்கு இரையாகியுள்ளதாகவும், 2,000 வீடுகள் எரிந்து சாம்பலாகியதாகவும், 24 போ் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர வன உயிரினங்களும் அதிக அளவில் பலியாகி விட்டன.
ஆஸ்திரேலியாவில் கோரமான காட்டுத் தீயால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக கூடுதலாக 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலா் நிதியை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.10,000 கோடி) அந்நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிசன் திங்கள்கிழமை அறிவித்தாா்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை எமி ஜாக்சன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
ஆஸ்திரேலியா, உனக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். டஜன் மக்கள் உயிரிழந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு இழந்துள்ளார்கள். 50 கோடி வன உயிரினங்கள் பலியாகியுள்ளன. ஒட்டுமொத்த வன உயிரினங்களும் தாவரங்களும் அழியும் நிலை உள்ளது. இது ஒரு பருவமழை நெருக்கடி. இது நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கவில்லையென்றால் வேறு என்ன செய்ய முடியும் எனத் தெரியவில்லை.
நம்முடைய வீடான இந்தக் கிரகம் நம்முடைய பொறுப்பில் உள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும். செய்திகளைப் படிக்கும்போது இதுபோன்ற பேரிழப்புகளைக் காணும்போது என் இதயம் உடைகிறது. இதைச் சரி செய்ய என் பங்கும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. நீங்களும் தான். தாவர உணவுக்கு மாறுங்கள். அல்லது அதிகக் காய்கறைகளைச் சேர்த்துக்கொண்டு குறைவான அசைவ உணவைச் சாப்பிட ஆரம்பியுங்கள். நம் கிரகத்தைக் காப்பாற்றுபவர்களுக்கு உதவுங்கள். ஆஸ்திரேலியாவுக்கு நீங்களும் நன்கொடை செலுத்தலாம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


