தனது கன்னட படமான ஓ-வின் மூலம் பாலிவுட் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் கிரிதேவா ஹாசன். இந்த அடையாளத்துடன் பாலிவுட்டில் ஹிந்தி இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். ஒய் என பெயரிடப்பட்ட அவரது புதிய ஹிந்திப்படம், சைக்காலஜிகல் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் லியோனிலா என்ற புதுமுக நடிகையை அறிமுகம் செய்துள்ளார் கிரிதேவா ஹாசன். மங்களூருவிலிருந்து பாலிவுட்டுக்கு வந்துள்ள லியோனிலா, தனது பிற வேலைகளைப் போல நடிப்பையும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேதக் குலால் இயக்கத்தில் ஜோயல் ரெபெல்லோ பாடிய 'ஆப் குச் ஐசா’ என்ற ஹிந்தி இசை ஆல்பத்தில் லியோனிலா நடித்துள்ளார். ஒய் படத்தில் இவருக்கு ஜோடியாக யுவன் நடிக்கிறார். கமல் கிமிரே இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராக்கெட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ராக்ஸி, மது ஜி எம், மற்றும் டாக்டர் அஜித் ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தைத் தயாரிப்பாளர்கள் சென்ஸாருக்கு அனுப்பவிருக்கும் நிலையில், படத்தின் முதல் தோற்றத்தைப் பகிர்ந்துள்ளனர், விரைவில் ஒரு டீஸர் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.
கார்த்திக் மல்லூர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, மாரு பிரதர்ஸ் இசையமைக்கிறார்கள். கிறிஸ்டோபர் லீ மற்றும் வினோத் பசவராஜ் பின்னணி இசை அமைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


