மணிப்பூர் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பவர் இவர்தான்!

சசிகலா வேடத்துக்கு பிரியா மணியைத்தான் முதலில் நடிக்கவைப்பதாக இருந்தோம்.

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 9:58 am

தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பவர் யார் என்கிற கேள்விக்குத் தற்போது விடை கிடைத்துள்ளது. 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது. 

இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ். ஜூன் 26 அன்று வெளியாகவுள்ளது.

ஒரு பேட்டியில் இப்படம் குறித்து இயக்குநர் விஜய் கூறியதாவது:

சசிகலா வேடத்துக்கு பிரியா மணியைத்தான் முதலில் நடிக்கவைப்பதாக இருந்தோம். ஆனால் தேதிகள் பிரச்னை காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லை. உடனடியாக எங்களுடைய தேர்வு, பூர்ணா தான். மேக் அப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். வேடத்துக்கு அருமையாகப் பொருந்தினார் என்று கூறியுள்ளார்.

இதுதவிர வி.என். ஜானகி வேடத்தில் மதுபாலா நடிக்கவுள்ளார். இதுகுறித்து விஜய் கூறியதாவது: ஜெயலலிதாவின் அம்மா வேடத்தில் நடிக்கத்தான் மதுபாலாவைத் தேர்வு செய்தோம். ஆனால் அவரை நேரில் பார்த்தபோது ஜானகி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.