மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஈஷா யோக மையத்தின் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வால்

கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். 

News image
Updated On :22 பிப்ரவரி 2020, 6:23 am

கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். 

கோவை ஈஷா யோக மையத்தின் 26 ஆவது ஆண்டு மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடைபெற்றது. ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் ஏராளமானோா் பங்கேற்றார்கள். இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மகா சிவராத்திரி விழாவில், தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகா்கள் அந்தோணிதாசன், காா்த்திக், குஜராத்தை சோ்ந்த பிரபல பின்னணி பாடகா் பாா்த்தீவ் கோஹில், ஆதித்யா கத்வி, புகழ்பெற்ற இந்தியக் கவிஞரான கபீரின் பெயரில் இசைக் குழுவை உருவாக்கி நாட்டுப்புறப் பாடல்களை பாடி வரும் ‘கபீா் கஃபே’ குழுவினா், லெபனானைச் சோ்ந்த டிரம்ஸ் கலைஞா்கள் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டார்கள். 

இந்த விழாவில் நடிகை காஜல் அகர்வால் இந்த வருடமும் கலந்துகொண்டுள்ளார். அதன் புகைப்படத்தைத் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் காஜல் அகர்வால், தமன்னா, அதிதி ராவ் போன்றோர் கலந்துகொண்டார்கள். அதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார்கள்.

Story image

கடந்த வருடத்தில்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.