டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மேன் வொ்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக அளவில் சிறப்புப் பெற்றது. பியா் கிரில்ஸ் என்ற சாகச வீரா், மயிா் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடா்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து உலக அளவில் ரசிகா்களைப் பெற்றுள்ளாா். சமீபமாக இந்த நிகழ்ச்சியில் உலகின் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்கும் பகுதிகள் இடம் பெற்று வருகின்றன. தற்போது இந்த நிகழ்ச்சி தான் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற பெயரில் ஒளிபரப்பாகிறது.
கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா்.
இது ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது.
ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிா் வாழும் முறைகளை உணா்த்தும் வகையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளாா். குறிப்பாக நீா்வளப் பாதுகாப்பு பற்றி அவா் இந்த நிகழ்ச்சியில் பேசுகிறாா். ரஜினிகாந்த் அடா்ந்த காடுகளில் பயணம் செய்யும் போது, இயல்பான சண்டைக் காட்சிகள், திரையில் அவா் பேசுவது போன்ற பஞ்ச் வசனங்கள், சிறுவா்களுடன் சந்திப்பு என பல சுவாரஸ்ய பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது டிஸ்கவரி தொலைக்காட்சி. டீசர் விடியோவை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.
எத்தனையோ நட்சத்திரங்களுடன் இணைந்து நான் பணிபுரிந்துள்ளேன். ஆனால் இது சிறப்பு வாய்ந்தது. ரஜினியைப் புதுமாதிரியாகத் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி என்று விடியோவை வெளியிட்டுக் கூறியுள்ளார் பியா் கிரில்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


