/

அரசியலுக்கு மத்தியில் அண்ணாத்த: ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினி

​நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN


நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

தர்பார் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.

அண்ணாத்த படப்பிடிப்பு டிசம்பர் 15 அன்று மீண்டும் தொடங்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் பிறந்த நாளன்று அறிவித்தது. இந்த நிலையில் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை புகைப்படத்துடன் அறிவித்துள்ளது.

ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31-இல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ரஜினி அறிவித்துள்ள நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.