இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

விடியோவில் கஞ்சா பயன்படுத்தினாரா?: பிரபல பாலிவுட் இயக்குநர் மீது புகார்

கலந்துரையாடல் நிகழ்ச்சி விடியோ ஒன்றில் கஞ்சா பயன்படுதியதாக் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

News image

அனுராக் காஷ்யப்

Updated On :10 ஏப்ரல் 2020, 11:08 am

மும்பை: கலந்துரையாடல் நிகழ்ச்சி விடியோ ஒன்றில் கஞ்சா பயன்படுதியதாக் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்.  கரோனா ஊரடங்கின் காரணமாக இவர் பங்கேற்ற  இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றின் விடியோ சமீபத்தில் வெளியானது. அதில் இவர் கையில் கஞ்சா போன்ற பொருளை காகிதக் குழல் ஒன்றில் அடைப்பது மாதிரியான காட்சி இடம்பெற்றிருந்தது. இதைப்பார்த்த ஒருவர் ட்விட்டர் வழியாக மும்பை மாநகர காவலதுறையிடம், ‘அனுராக் காஷ்யப் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை பயன்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்’ கோரியிருந்தார்.

அதற்கு ட்விட்டர் வழியாகவே மும்பை மாநகர காவல்துறையை டேக் செய்து பதிலளித்த காஷ்யப், ‘நான் பயன்படுத்தியது வெறும் புகையிலைதான். எதற்கும் ஒருமுறை முழுமையாக இதுகுறித்து விசாரணை செய்து, பாஜக ஆதரவாளர்களுக்கும், ட்விட்டரில் கேலி செய்பவர்களுக்கும் திருப்தி ஏற்படச் செய்யுங்கள்’ என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.

ஆனாலும் இந்த கரோனா தடைகாலத்தில் அவருக்கு எப்படி புகையிலை கிடைத்தது என்று, நெட்டிசன்கள் அவரைத் தொடர்ந்து விமர்சித்து, கிண்டல் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.