கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட விழா குறித்த சமீபத்திய தகவல்களை அதன் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் 2020 கேன்ஸ் திரைப்பட விழா மே 12 - 23 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலில் முடிவு செய்த தேதிகளில் கேன்ஸ் பட விழாவை நடத்த முடியாது. இதனால் ஜுன் இறுதி அல்லது ஜுலை ஆரம்பம் வரை பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் தற்போதைய நிலைமை பற்றி கேன்ஸ் பட விழாவின் இயக்குநர் ப்ரேமாக்ஸ் ஒரு பேட்டியில் கூறியதாவது: கேன்ஸ் பட விழாவை டிஜிடல் விழாவாக மாற்ற முடியுமா எனக் கேட்கிறார்கள். டிஜிடல் போட்டி? இதுகுறித்து நாங்கள் ஆலோசனை நடத்தவேண்டும். பெரிய திரையில் திரையிட முடியாத படங்களின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளார்கள். அதை ஏன் டிஜிடல் சாதனங்களின் மூலம் காண்பிக்க எண்ணுகிறீர்கள்? பெரிய திரையில் திரையிட்டு, பட விழாக்களிலும் திரையிடுவதற்காகத்தான் இயக்குநர்கள் படங்களை உருவாக்குகிறார்கள். அதை ஐ போனில் காண்பிக்க ஏன் முயல்கிறீர்கள்? வேறு வழியில் கேன்ஸ் பட விழாவை நடத்துவதுதான் தீர்வு என நான் நம்பவில்லை என்று கூறியுள்ளார்.
பல திரைப்படங்கள் முதலில் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டு பிறகுதான் இதர நாடுகளில் திரையிடப்படும். கடந்த வருடம் இதேபோல திரையிடப்பட்ட பாராசைட் படம் கேன்ஸ் விருது மட்டுமல்லாமல் ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. மேலும் இந்தச் சூழலிலும் கேன்ஸ் பட விழாவுக்குத் தேர்வாவதற்காகப் படங்களைப் பல்வேறு நாடுகளிலிருந்தும் அனுப்பி வருகிறார்கள். இதனால் பிரான்ஸில் ஊரடங்கு உத்தரவு முடிந்து, நிலைமை சீரான பிறகு கேன்ஸ் பட விழா குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 82,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 5,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


