மூன்றாவது கணவரும் டெமியை விட 15 வயது இளையவருமான ஆஷ்டன் கட்சர் மீது டெமி மிக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு ஒன்றை சமீபத்தில் தனது புத்தக வெளியீட்டு விழாவின் போது முன் வைத்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆஸ்டனை, டெமி திருமணம் செய்து கொண்டதற்கான முக்கிய காரணம், தன்னை தனது 20 களில் வாழ வைக்க ஆஷ்டன் போன்ற வயதில் இளையவரால் மட்டுமே முடியும் என்று நம்பி தான் ஆஷ்டன் மீது காதல் வயப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவரை மணந்து கொண்டதாகவும் தெரிவிக்கும் டெமி, தங்களிடையேயான விவாகரத்துக்கு முக்கிய காரணமாக முன் வைப்பது, ஆஷ்டன்... தங்கள் அந்தரங்கமான திருமண வாழ்வின் அர்த்தம் கெடும்படியாக மல்டிபிள் செக்ஸுவல் பார்ட்னர்களை (பாலியல் கூட்டாளிகளாக மனைவி தவிர வேறு சில பெண்களையும் இணைத்துக் கொள்வது) உறவுக்குள் அறிமுகம் செய்து அவர்களைத் தானும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியது தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் டெமி மூர்.