பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட விடியோக்களில் 3-ம் இடம்: அசத்தும் விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடல்!

கடந்த 24 மணி நேரத்தில் யூடியூபில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட 3-வது விடியோ என்கிற சாதனையை...

News image
Updated On :2 செப்டம்பர் 2019, 9:27 am

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிகில் படத்துக்காக ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் நேற்று வெளியானது. ரஹ்மான் இசையில் விஜய் பாடிய பாடல் என்பதால் சமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் அதிகமாகப் பகிரப்பட்டது. இதனால் தற்போது இந்தப் பாடலுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் யூடியூபில் கிடைத்துள்ளன. இதையடுத்து சர்வதேச அளவில் கவனமும் பெற்றுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் யூடியூபில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட 3-வது விடியோ என்கிற சாதனையை இப்பாடல் செய்துள்ளது. குறுகிய கால அளவில் நான்காவது இடத்திலிருந்து தற்போது 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதால் முதல் இடத்தையும் பிடிக்குமா என்கிற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.