தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் மலையாள இயக்குநர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். அவர், கேரள டிஜிபி லோக்நாத் பெஹராவிடம் மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ஒடியன் பட வெளியீட்டுக்குப் பிறகு சமூகவலைத்தளங்களில் மோசமான எதிர்வினைகள் எனக்கு வருகின்றன. நான் தவிர்க்க நினைத்தாலும் ஸ்ரீகுமார் மேனன் எனக்குத் தொல்லை தருகிறார். அவரும் அவருடைய நண்பர் மாத்யூ சாமுவேலும் எனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். ஸ்ரீகுமாரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். மஞ்சு வாரியர் நடித்திருந்த ஒடியன் படத்தை ஸ்ரீகுமார் இயக்கியுள்ளார்.
இதற்கு ஸ்ரீகுமார் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதில் அளித்துள்ளதாவது: பத்திரிகைகளின் வழியாக உங்கள் புகாரை அறிந்துகொண்டேன். மஞ்சு வாரியரை நம்ப வேண்டாம் என்று பலரும் கூறினார்கள். திலீப்பை விட்டு பிரிந்தபோது வெறும் ஆயிரத்து ஐநூறு மட்டும் இருப்பதாகச் சொன்னதை மறக்கவில்லை. அப்போது ரூ. 25 லட்சத்தை அளித்து விளம்பர வாய்ப்பை அளித்தேன். அந்த குருவாயூரப்பனே வந்து உதவி செய்வதாக நீங்கள் சொன்னது ஞாபகத்தில் உள்ளது. உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் எனத் தெரியவில்லை. என் மீதான புகாரைச் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், திருச்சூர் கிழக்கு காவல்துறை, மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


